அதிமுகவில் கையெழுத்து வேட்டை: பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வலுக்கும் எதிர்ப்பு

முதல்வர் ஜோசப் விஜய்யை சந்திக்க தீவிர முயற்சி
அதி​முக​ பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சகர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி

அதி​முக​ பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சகர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி

Updated on
1 min read

சென்னை: அதி​முக​வில் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதிர்ப்பு வலுத்​துள்​ளது. முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் அதி​முக எம்​எல்​ஏக்​கள் 34 பேர் தவெக​வுக்கு ஆதர​வு அளிக்க முடி​வெடுத்​துள்​ளனர். அவர்​களது ஆதர​வுக் கடிதத்​துடன் முதல்​வர் ஜோசப் விஜய்யை சந்​திக்க சி.​வி.சண்​முகம் முயற்சி மேற்​கொண்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளது. ஆனால், எதிர்க்​கட்சி அந்​தஸ்​து ​கூட கிடைக்​காத அளவுக்கு தோல்​வியை சந்​தித்​துள்​ளது. பல தொகு​தி​களில் 3-ம் இடத்​துக்கு சென்​றதுடன், பலர் டெபாசிட்​டை​யும் இழந்​துள்​ளனர்.

இதனால், வெற்றி பெற்ற எம்​எல்​ஏக்​கள் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதி​ராக போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். தோல்விக்குப் பொறுப்​பேற்று பொதுச் செய​லா​ளர் பதவி​யில் இருந்து அவர் விலக வேண்​டும் என வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

அடுத்​தகட்ட நடவடிக்கை தொடர்​பாக முன்​னாள் அமைச்​சர்​கள் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் எஸ்​.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்​றும் இதர எம்​எல்​ஏக்​கள் கடந்த 3 நாட்​களாக சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள சி.​வி.சண்​முகம் இல்​லத்​தில் தீவிர ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர். இந்த நிலை​யில், அதி​முக எம்​எல்​ஏக்​கள் 34 பேர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் தவெக​வுக்கு ஆதர​வளிக்க முடி​வெடுத்​துள்​ளனர்.

முன்​ன​தாக, நேற்று காலை பழனி​சாமி தலை​மை​யில், சென்னை பசுமைவழிச் சாலை​யில் உள்ள அவரது இல்​லத்தில், சி.​வி.சண்​முகத்​தின் நடவடிக்கை தொடர்​பாக மாவட்​டச் செய​லா​ளர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டுள்​ளது. அதில், சி.​வி.சண்​முத்​துடன் சமா​தானப் பேச்சு நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. அதைத் தொடர்ந்​து, பழனி​சாமி தரப்​பில், சி.​வி.சண்​முகத்தை சந்​தித்து பேசி​ய​தில், ‘‘பழனி​சாமி சரி​யான கூட்​டணி அமைக்​க​வில்​லை. வேட்​பாளர்​களுக்கு கட்சி நிதி​யும் போதிய அளவு வழங்​க​வில்​லை. கட்​சி​யின் தோல்விக்கு அவர்​தான் காரணம். அதனால், அவர் பதவி விலக வேண்​டும். தவெக​வுக்கு அதி​முக எம்​எல்​ஏக்​கள் ஆதரவு அளிப்​பது உறு​தி. அதில் எந்த மாற்​ற​மும் இல்​லை’’ என்று சி.​வி.சண்​முகம் திட்​ட​வட்​ட​மாக கூறி​யதாக தெரிகிறது.

அதி​முக எம்​எல்​ஏக்​கள் 34 பேரின் ஆதர​வுக் கடித​மும் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. மூன்​றில் 2 பங்​கு, அதாவது 32 எம்​எல்​ஏக்​களுக்கு மேல் தவெக​வுக்கு ஆதரவு தெரி​வித்​தால் கட்​சித் தாவல் சட்​டம் பாயாது என சட்ட ஆலோ​சனை​யும் பெறப்​பட்​டுள்​ளது. 34 பேரின் ஆதரவுக் கடிதத்​துடன், முதல்​வர் ஜோசப் விஜய்யை சந்​திக்க சி.​வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ள​தாக கூறப்படுகிறது. அதிமுக சட்டப்பேரவைக் குழுத்தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்வதற்கான முயற்சியும் தீவிரமாக நடந்து வருகிறது.

<div class="paragraphs"><p>அதி​முக​ பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சகர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி</p></div>
முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்: 9 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் அர்லேகர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in