அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு என்ஜிஓ சங்கம் கோரிக்கை

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு என்ஜிஓ சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: மத்​திய அரசை போல் தமிழக அரசும் அகவிலைப்​படியை 58 சதவீதத்​தில் இருந்து 60 சதவீத​மாக உயர்த்தி வழங்க வேண்​டும் என்​று, முதல்​வருக்கு என்ஜிஓ சங்​கம் கோரிக்கை விடுத்துளளது.

இதுதொடர்​பாக, தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யத்​தின் (என்​ஜிஓ) மாநில தலை​வர் த.அமிர்​தகு​மார் தமிழக முதல்​வருக்கு அனுப்​பி​யுள்ள மனு: விலை​வாசி உயர்வை கருத்​தில் கொண்​டு, மத்​திய அரசு தனது ஊழியர்​களுக்கு அகவிலைப்​படியை 58 சதவீதத்​தில் இருந்து 60 சதவீத​மாக உயர்த்​தி​யுள்​ளது.

தேர்​தல் அறிக்​கை​யில் தெரி​வித்​த​வாறு தமிழக அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​படும் என்​றும், அரசு ஊழியர் மற்​றும் ஆசிரியர் நலன் தொடர்ந்து காப்​பாற்​றப்​படும் என்று முதல்​வராக பதவி​யேற்ற போதும் தாங்​கள் உறுதி அளித்​துள்​ளீர்​கள்.

அந்த வகை​யில், தமிழக அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​கள், ஓய்​வூ​தி​யர்​கள், குடும்ப ஓய்​வூ​தி​யர்​கள், சிறப்பு கால​முறை ஊதிய பணி​யாளர்​கள் தொகுப்​பூ​தி​யம் மற்​றும் மதிப்​பூ​திய ஊழியர்​கள் ஆகியோ​ருக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்​படியை 58 சதவீதத்​தில் இருந்து 60 சதவீத​மாக உயர்த்தி வழங்​கு​மாறு கேட்​டு்​கொள்​கிறோம்.

அகவிலைப்​படி உயர்வை காலம் தாழ்த்​தாமல் உடனடி​யாக அறி​விப்பு செய்​தால் அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் உத்​வேகத்​துடன் பணி​யாற்​று​வார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு என்ஜிஓ சங்கம் கோரிக்கை
டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் ஆன்லைனில் நடத்தப்படும் 4 ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in