டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் ஆன்லைனில் நடத்தப்படும் 4 ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் ஆன்லைனில் நடத்தப்படும் 4 ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள்
Updated on
1 min read

சென்னை: டேட்டா சயின்​ஸ், எலெக்ட்​ரானிக் சிஸ்​டம், ஏரோ​நாட்​டிக்ஸ் உள்​ளிட்ட பிரிவு​களில் 4 ஆண்டு ஆன்​லைன் பி.எஸ். பட்​டப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான அறி​விப்பை சென்னை ஐஐடி வெளி​யிட்​டுள்​ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்​றவர்​கள் மே 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்கலாம்.

இது தொடர்​பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அனைத்து தரப்பு மாணவர்​களுக்​கும் உயர்​தரக் கல்வி அளிக்​கும் வகை​யில் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்​ளி​கேஷன்​ஸ், எலெக்ட்​ரானிக் சிஸ்​டம், மேனேஜ்மென்ட் அண்ட் டேட்டா சயின்​ஸ், ஏரோ​நாட்​டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்​னாலஜி ஆகிய 4 வித​மான பி.எஸ். பட்​டப் படிப்​பு​களை சென்னை ஐஐடி ஆன்​லைனில் வழங்கி வரு​கிறது.

இவை 4 ஆண்டுக்கால படிப்புகள். மாணவர்​கள் இதை தனி பட்​டப் படிப்​பாகவோ, வழக்​க​மான கல்​லூரி பட்​டப் படிப்​புடன் சேர்ந்தோ படிக்​கலாம். இதற்​கான வகுப்​பு​கள் பெரும்​பாலும் ஆன்​லைனில் நடத்​தப்​படும். நாடு முழு​வதும் பல்​வேறு மையங்​களில் நேரடி தேர்​வு​கள் நடத்​தப்​படும்.

மாணவர்​கள் தங்​கள் வசதிக்கு ஏற்ப படிப்​பைத் தொடரலாம். அவர்​களது படிப்​புக் காலத்​துக்கு ஏற்ப சான்​றிதழ், டிப்​ள​மா, பட்​டம், பி.எஸ். பட்​டம் என வழங்​கப்​படும். இப்​படிப்​பு​களில் சேர, பிளஸ்-2 தேர்ச்சி போதும். வயது வரம்பு கிடை​யாது.

ஜேஇஇ நுழைவுத் தேர்வு தேர்ச்​சி​யும் அவசி​யம் இல்​லை. தகு​தி​காண் நடை​முறை மூலம் மாணவர்​கள் சேர்க்​கப்​படு​வார்​கள்.

இதில் சேர விரும்​புவோர் https://study.iitm.ac.in என்ற இணை​யதளம் வாயி​லாக மே 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். கூடு​தல் விவரங்​களை இணை​யதளத்​தில் விரி​வாக அறிய​லாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் பிரிவுகளில் சென்னை ஐஐடியில் ஆன்லைனில் நடத்தப்படும் 4 ஆண்டு பி.எஸ். பட்டப் படிப்புகள்
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் எத்தனை? - பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in