பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருள்: இந்தியா உதவிக்கரம்

பூகம்பத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள வெனிசுலாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின்கீழ், 9 மருத்துவ அதிகாரிகள் உட்பட 41 பேர் கொண்ட ராணுவக் குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.படம்: பிடிஐ

பூகம்பத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள வெனிசுலாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின்கீழ், 9 மருத்துவ அதிகாரிகள் உட்பட 41 பேர் கொண்ட ராணுவக் குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.படம்: பிடிஐ

Updated on
2 min read

புதுடெல்லி / கராகஸ்: வெனிசுலா பூகம்​பத்​தில் இது​வரை 589 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 49,500-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. பூகம்​பத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்​களில் 35 டன் நிவாரணப் பொருட்​களை வெனிசுலா​வுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

தென்​அமெரிக்க நாடான வெனிசுலா​வின் யாராகுய் மாகாணத்​தின் சான்​பெலிப், யுமரே நகரங்​களை மைய​மாகக் கொண்டு நேற்று முன்​தினம் சக்தி ​வாய்ந்த 2 பூகம்​பங்​கள் ஏற்​பட்​டன. இவை ரிக்​டர் அலகில் 7.2 மற்​றும் 7.5 ஆகப் பதி​வானது. இதன்​காரண​மாக யாராகுய், லா குய்ரா உட்பட 7 மாகாணங்​கள் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டுள்​ளன. தலைநகர் கராகஸில் நூற்​றுக்​கணக்​கான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் தரைமட்​ட​மாகி உள்​ளன. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் வெனிசுலா ராணுவம் உட்பட அனைத்து பாது​காப்பு படைப் பிரிவு​களும் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு உள்​ளன. அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​கள், தென்​அமெரிக்க நாடு​களின் ராணுவ வீரர்​களும் மீட்​புப் பணி​யில் இணைந்​துள்​ளனர்.

இந்திய ராணுவத்தை சேர்ந்த 9 மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட 41 மருத்துவப் பணியாளர்களும் வெனிசுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சைகளை அளிப்பார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​க்கின் ஸ்டார்​லிங்க் நிறு​வனம் சார்​பில் வெனிசுலா​வில் இலவச​மாக இணைய இணைப்பு வழங்​கப்​பட்டுள்​ளது.

இதன்​மூலம் அந்த நாட்​டின் தகவல் தொடர்பு சீரடைந்​திருக்​கிறது. ஆனால் மின் விநி​யோகம், குடிநீர் விநி​யோகம், சமையல் காஸ் விநி​யோகம் முழு​மை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. பூகம்ப பாதிப்​பு​கள் குறித்து மீட்​புப் படை வீரர்​கள் கூறிய​தாவது: அடுத்​தடுத்து ஏற்​பட்ட 2 பூகம்​பங்​களால் லா குய்​ரா​வின் மலைப் பகு​தி​களில் கட்​டப்​பட்​டிருந்த அனைத்து அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களும் நொறுங்கி சரிந்​துள்​ளன. தலைநகர் கராகஸிலும் நூற்​றுக்​கணக்​கான அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் இடிந்​துள்​ளன.

வெனிசுலா பாது​காப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்​சத்​துக்​கும் மேற்பட்ட வீரர்​கள் மீட்​புப் பணி​களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா உட்பட 25 நாடு​களைச் சேர்ந்த 1,000-க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்டு வீரர்​களும் மீட்​புப் பணி​களில் உதவி வரு​கின்​றனர். இடி​பாடு​களில் சிக்​கி​யுள்​ளோரை மோப்ப நாய்​களின் உதவி​யுடன் அதிதீ​விர​மாக தேடி வரு​கிறோம்​. இவ்​வாறு அவர்​கள்​ ​கூறினர்​.

‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால மருத்துவமனைகள்

நிவாரணப் பொருட்களுடன் 2 ‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால நடமாடும் மருத்துவமனைகளையும் வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. ‘BHISHM' (இந்திய சுகாதார முன்னெடுப்பு - நட்பு உதவி) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பீஷ்ம் க்யூபில் 1,000 மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய மருந்துகள் இருக்கும். இதன்மூலம் போர் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு நாளில் 200 பேர் வரை சிகிச்சை அளிக்க முடியும். ஒரு நாளில் 20 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். ஒரு பீஷ்ம் கியூபில் உள்ள கூடாரம் மூலம் 12 நிமிடங்களில் தற்காலிக மருத்துவமனையை உருவாக்க முடியும்.

இதில் உள்ள உபகரணங்கள் மூலம் மின்சாரம், ஆக்ஸிஜனையும் உடனடியாக உற்பத்தி செய்யலாம். 180 மொழிகளில் நோயாளிகளிடம் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் பிரத்யேக செயலியும் இதில் உள்ளது. உக்ரைன், மாலத்தீவு, ஜமைக்கா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால தற்காலிக மருத்துவமனைகள் தற்போது மனிதாபிமான அடிப்படையில் வெனிசுலாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

<div class="paragraphs"><p>பூகம்பத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள வெனிசுலாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின்கீழ், 9 மருத்துவ அதிகாரிகள் உட்பட 41 பேர் கொண்ட ராணுவக் குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.படம்: பிடிஐ</p></div>
அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக களமிறங்குகிறாரா சீமான்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in