“திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை” - நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ்

Updated on
1 min read

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “சமீபத்தில் நான் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய சில கருத்துகள் தவறாக திரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு மக்கள்தான் காரணம். அப்படி இருக்கையில், மக்களைப் பற்றி நான் தவறாக பேசியதாக சிலர் கூறுவது என் மனதை காயப்படுத்தியுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அரசியல் என்பது பதவிக்கானது மட்டுமல்ல, விஜய் சார் திரையுலகில் அறிமுகமான காலம் தொட்டு, அவருக்காக போஸ்டர் ஒட்டி, அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவருக்காக களத்தில் உழைத்த எத்தனையோ தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அந்த உழைப்பாளர்களையும், விசுவாசிகளையும் மீறி நான் அங்கு போட்டியிடுவது தர்மமாக இருக்காது. யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை விஜய் சார் தான் முடிவு செய்வார். எனவே, நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை.

அதேசமயம், வேறு எங்கேயும் போட்டியிட மாட்டேன் என்றும் சொல்லவில்லை. நிச்சயம் போட்டியிடுவேன். எங்கு சேர்ந்தால் மரியாதை கிடைக்குமோ, யாரிடம் இணைந்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமோ என்பதை தீர ஆலோசித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>நடிகர் ராகவா லாரன்ஸ் </p></div>
இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in