Published : 01 Jun 2023 06:10 AM
Last Updated : 01 Jun 2023 06:10 AM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே முன் விரோதம் காரணமாக கோயில் திருவிழாவில் 5 குடும்பத்தினருக்கு வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோயிலை பூட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயில் நிர்வாகத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ், சதீஷ்குமார், விநாயகம், பார்த்தீபன் உள்ளிட்ட 5 குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் திருவிழாவையொட்டி மலர் மாலை கொண்டு வந்து கோயிலில் உள்ள முத்துமாரியம்மனுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட நேற்று டிராக்டரில் வந்தனர்.
அப்போது, கோயில் நிர்வா கத்தினர் இவர்கள் வருவதை அறிந்து முன்கூட்டியே கோயில் முன்பக்க இரும்பு கதவினை பூட்டிவிட்டு சென்றனர். இதனால் வழிபாடு நடத்த வந்த 5 குடும் பங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், முதியவர்கள், குழந்தை கள் என 30-க்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தின் முன்பாக 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். கோயில் கதவை திறந்து அம்மனை வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த தகவலறிந்த உமராபாத் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். கோயில் நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தையின்போது, சமாதானம் ஆகாமல் காவல் துறையினர் முன்னிலையிலேயே 5 குடும்பத்தினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் காவலர்கள் அங்கு விரைந்து சென்று கூட்டத்தை கலைத்தனர். பிறகு, 6 மணி நேரம் கழித்து காவல் மற்றும் வருவாய்த்துறை முன்னிலையில் கோயிலில் பூட்டப்பட்டிருந்த பூட்டு திறக்கப்பட்டு 5 குடும்பத்தினர் அம்மனை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT