Published : 26 May 2023 06:30 AM
Last Updated : 26 May 2023 06:30 AM

நெடுஞ்சாலை பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாம்: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பல்நோக்கு மருத்துவ முகாமை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கிவைத்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையவளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பன்நோக்கு மருத்துவ முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், "நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் உடல் நலனை பேணுவதற்காக, காவேரி மருத்துவமனை உதவியுடன், பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், மற்றும் உணவியல் நிபுணர்கள் மூலம் இம்முகாம் நடைபெறுகிறது.

அலுவலர்கள் அனைவரும் ‘வருமுன் காப்போம்‘ என்பதை கருத்தில் கொண்டு எந்தவித தயக்கமும் இன்றி இந்த முகாமை பயன்படுத்தி பலன் பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலர் பிரதீப் யாதவ், காவேரி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அய்யப்பன் பொன்னுசாமி, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் நா.சாந்தி, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர் என்று அரசுசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x