Published : 20 May 2023 10:48 AM
Last Updated : 20 May 2023 10:48 AM
சென்னை: மத்திய அரசின் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்கு கர்நாடக தேர்தல் படுதோல்வியை காரணம் காட்டி விமர்சித்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள்,
உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு,
திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள்,
டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி,
இவை எல்லாம் மறைக்க
நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி.
பாசமா? எல்லாம் வேஷம்! https://t.co/94NSQO8dGs
என்று கேள்விகளுடன் ஒரு ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். ஏற்கெனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு உள்ளான ரூ.500, ரூ.1000 நோட்டுகளையும் சுட்டிக்காட்டி கவிதை வடிவில் அவர் தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இதற்கு ட்வீட் மூலம் தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களில் இம்மாதம் 20-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார். தற்போது கள்ளச்சாராய மரணங்களை மறைக்க முதல்வர் ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டதை விமர்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT