Published : 16 May 2023 07:03 PM
Last Updated : 16 May 2023 07:03 PM

‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ - சாலை விதிமீறல்களை கண்காணிக்க தமிழக அரசின் புதிய நடைமுறை

போக்குவரத்து விதிமீறல் கண்காணிப்பு

சென்னை: சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய விதிகளை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. மேலும், போக்குவரத்து காவலர்கள் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதிக வேகம், ஹெல் மெட் / சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச் செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், அவரச கால வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டே அபராதம் விதிக்கப்படும்.

தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதத்தொகையை செலுத்திக்கொள்ளலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x