Published : 12 May 2023 06:00 AM
Last Updated : 12 May 2023 06:00 AM

வேலூர் | ஆவினில் முறைகேடாக கடத்திய 100 லிட்டர் பால் பறிமுதல்

வேலூர்: வேலூர் ஆவினில் இருந்து பால் விநியோ கத்தில் முறைகேடாக கடத்த முயன்ற 100 லிட்டர் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் கூட்டுறவு பால் ஒன்றியம் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆவின் பால் விநியோகம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் விநியோகத்திலும் குளறுபடி நிலவுகிறது. ஆவின் நிர்வாகத்தின் தொடர் குளறுபடிகளால் தாங்கள் பாதிக் கப்படுவதாக முகவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். வேலூர் ஆவின் பால் நிறுவனத்தில் பால் விநியோகம் தற்போது 81 ஆயிரம் லிட்டர் என்றளவாக உள்ளது. ஆவின் பால் விநி யோகத்தில் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட முகவர் கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆவின் முகவர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லும் பால் பாக் கெட்டுகள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஆவின் பால் விநியோக வாகனங்களை அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அதன்படி, வேலூர் ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தர வடிவேலு தலைமையிலான குழுவினர் பால் விநி யோக வாகனங்களை நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், திமிரி வழித்தடத்தில் புறப்பட்ட ஒரு வேனில் ஒதுக்கீடு அளவைக் காட்டிலும் கூடுதலாக 100 லிட்டர் பால் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 100 லிட்டர் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பால் கடத்தல் தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x