Published : 07 Apr 2023 06:05 AM
Last Updated : 07 Apr 2023 06:05 AM
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சுகாதாரத் துறை தொடர்பாக துணைக் கேள்வி கேட்க அனுமதிக்குமாறு பண்ருட்டி தொகுதி உறுப்பினரும், தவாக தலைவருமான தி.வேல்முருகன் வலியுறுத்தினார். ஆனால், பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து வேல்முருகன் வலியுறுத்தியதால், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘துணைக் கேள்வியாருக்குக் கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். குரலைஉயர்த்தக் கூடாது வேல்முருகன். அமருங்கள்’’ என்றார்.
பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவு பேசும்போது, ‘‘உறுப்பினர் வேல்முருகனுக்கு கடந்த 24, 28, 30, 31-ம் தேதிகளில், 4 துணைகேள்விகளுக்காக 4 முறை அனுமதிஅளித்துள்ளேன்.
இதுதவிர, பல அவசிய, பொதுமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கும் பேச அனுமதித்துள்ளேன். தினசரி கேள்வி வரவேண்டும்; துணைக் கேள்வி கேட்க வேண்டும் என்ற மரபு இல்லை. ஒருமுறை, இருமுறை, அல்லதுகேள்வியே கேட்காத உறுப்பினர்களும் உள்ளனர். அந்த அடிப்படையில்தான் வாய்ப்பு தருகிறேன். கட்சி சார்பாகவே, வேறுஎந்த நோக்கத்துடனோ கொடுக்கவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் கேட்கும் துறையில் மேலும் 20 பேர் கேட்டுள்ளனர். அறையில் வந்தே 20 பேர் கேட்டுள்ளனர். விவாதம் செய்ய வேண்டாம். எனக்குத் தெரியும், யாருக்கு எப்போது வாய்ப்புத் தர வேண்டும் என்று. பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. அதை மனதில் கொள்ள வேண்டும். அவையில் பெரிதாக சப்தம் எல்லாம் போடக்கூடாது’’ என்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘பேரவைத்தலைவர் பேரவையை நடத்துவதில் இருந்து, அவர் ஆசிரியர்பணியை மேற்கொண்டுள்ளதையும் அறிந்துள்ளோம். அவர் கனிவான ஆசிரியராக மட்டுமின்றி,கண்டிப்பான ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்பதை இன்றையநிகழ்வு மூலம் அறிந்துகொண்டுள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT