Published : 04 Apr 2023 06:21 AM
Last Updated : 04 Apr 2023 06:21 AM
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.18-ம் தேதியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.19-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஏப்.18, 19 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை, மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும். அதேவேளையில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் பொருந்தாது.
இந்த விடுமுறை நாட்களில், மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் ஏப்.29, மே 13 வேலை நாட்களாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT