Published : 23 Mar 2023 07:18 AM
Last Updated : 23 Mar 2023 07:18 AM

சேலம் | கிராம சபைக் கூட்டத்தில் அடிப்படை வசதி கோரி ஊராட்சித் தலைவர் காலில் விழுந்து வணங்கிய மக்கள்

சேலத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் , ஊராட்சி செயலாளர் மற்றும் தலைவரின் காலில் விழுந்து வணங்கி அடிப்படை வசதி செய்து தரக்கோரி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சேலம்: சேலத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் மற்றும் தலைவரின் காலில் விழுந்து வணங்கி அடிப்படை வசதி செய்து தரும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உலக தண்ணீர் தினத்தையொட்டி சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்யா நகர் பகுதியில் ஊராட்சித் தலைவர் சாமிநாதன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சியின் தலைவராக சுவாமிநாதன் உள்ளார்.

நேற்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலர் சுகுமார் மற்றும் ஊராட்சித் தலைவரிடம், அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர்.

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்து தராதது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

இதனால், வேறு வழியின்றி, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரக்கோரி, ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் காலில் விழுந்து மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஊராட்சித் தலைவர் சாமிநாதன் தன்னிச்சையாக செயல்படுகிறார். மத்திய, மாநில அரசுகள் ஊராட்சிக்காக ஒதுக்கிய நிதியை முறையாக செலவு செய்யாமல் இருக்கிறார். அடிப்படை வசதி கேட்டு ஊராட்சிஅலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

எனவே, கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதியும் செய்து தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x