Published : 23 Mar 2023 06:20 AM
Last Updated : 23 Mar 2023 06:20 AM
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாலையில் ஆடையின்றி சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை மீட்டுக் காத்த பெண் காவலரை எஸ்பி பாராட்டினார்.
நாகர்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகமிக்க ஆட்சியர் அலுவலக சந்திப்பில் மனநலம் பாதிக்க பெண் ஒருவர் உடலில் அரைகுறை ஆடையுடன் சுற்றித் திரிந்தார்.
அப்பகுதியில் பணியில் இருந்த நாகர்கோவில் பெண் போலீஸ் சரஸ்வதி, அந்தப் பெண்ணின் மீது ஒரு சேலையைப் போர்த்தி, அதை உடல் முழுவதும் சுற்றி கட்டி விட்டார். பின்னர் அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலில் இருந்த அரசு காப்பகத்துக்கு அழைத்துச் சென்று உதவிகள் செய்தார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத், காவலர் சரஸ்வதியைப் பாராட்டி பரிசு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT