Published : 03 Mar 2023 07:34 AM
Last Updated : 03 Mar 2023 07:34 AM
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு 2021-22-ம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.364 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைசட்டத்தின்படி 8 ஆயிரத்துக்கும்மேலான தனியார் பள்ளிகளில் 3.98லட்சம் குழந்தைகள் படித்துவருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் தரப்படும்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிலுவையை துரிதமாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு தனியார்பள்ளி நிர்வாகிகள் கோரிக்கைவிடுத்திருந்தனர். அதையேற்று தனியார் பள்ளிகளுக்கு 2021-22-ம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகைரூ.364.43 கோடிக்கான நிதியை தமிழக அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலர்காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 3.98 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். இதுதவிர நடப்புகல்வியாண்டுக்கான (2022-23) கல்விக் கட்டண நிலுவைத் தொகையும் விரைந்து வழங்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT