Published : 08 Jan 2023 04:15 AM
Last Updated : 08 Jan 2023 04:15 AM

சென்னை | உறவினரை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைப்பு

சென்னை: குடும்ப தகராறில் மனைவியின் சகோதரியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. அவர் தனது மனைவிராணியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ராணி, தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அழைத்துவர ராணியின் தாய் வீட்டுக்கு அண்ணாமலை சென்றுள்ளார். அப்போது, ராணியை அண்ணாமலையுடன் அனுப்ப அவரது சகோதரி உமா ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, நாட்டுத் துப்பாக்கியால் உமாவை 4 முறை சுட்டதில் சம்பவ இடத்திலேயே உமா உயிரிழந்தார். கடந்த2009-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த வேலூர் மகளிர் நீதிமன்றம், அண்ணாமலைக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.சந்திர சேகரன் அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர், அண்ணாமலை கொலை செய்ததாகக் கூறப்படும் காரணத்தில் உண்மையில்லை எனவும் சாட்சிகளும் முறையாக இல்லை எனவும் வாதிட்டார். இதையடுத்து, உமாவை திட்டமிட்டு அண்ணாமலை கொலை செய்யவில்லை எனக் கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x