Published : 08 Jan 2023 04:33 AM
Last Updated : 08 Jan 2023 04:33 AM

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் கடும் போட்டி: தொடர் போராட்டங்களால் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தங்களுக்கே உரிமை வழங் கக் கோரி போட்டி போராட்டங்கள் நடந்து வருவதால் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த ஆண்டு வரும் 15-ம் தேதி ஜல்லிக் கட்டு நடக்க உள்ளது. இங்கு யார் ஜல்லிக்கட்டு நடத்துவது என்பதில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர், அவனியாபுரம் கிராம கமிட்டியினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

விழா கமிட்டியில் அனைத்து சமூகத்தினருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காணும் வகையில் இந்த ஆண்டும் அரசே ஜல்லிக்கட்டை நடத்துகிறது. உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு நடத்தும் நோக்கில் சமாதானக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அவனியாபுரத்தை சேர்ந்தவர்களிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

தங்கள் கோரிக்கை ஏற்கப்படா ததால் சிலர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது ஆட்சியர், அமைச்சர் குறித்து விமர்சித்தனர். போலீஸார் அவர் களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கோரிக்கையை ஏற்காததால் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எந்த அலுவலரையும் நுழையவிட மாட்டோம் என எச்சரித்துவிட்டு போராட்டக் குழுவினர் சென்றனர்.

இதையடுத்து அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவனியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி தென்கால் பாசன விவசாயிகள் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

மாறி, மாறி போட்டி போராட்டங் கள் நடந்து வருவதால் அவனியா புரம் ஜல்லிக்கட்டை கூடுதல் பாதுகாப்புடன் நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x