Published : 01 Jan 2023 11:37 AM
Last Updated : 01 Jan 2023 11:37 AM
உதகை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் செயல்படும். இதற்கு பதிலாக வரும் 21-ம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT