Published : 30 Dec 2022 04:27 AM
Last Updated : 30 Dec 2022 04:27 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தினர் திண்டுக்கல்லில் உள்ள அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்போர்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து சமய நிலங்களில் வசிப்போர் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கான வாடகை பாக்கியை கரோனா தொற்று காலம் முழுவதும் ரத்து செய்ய வேண்டும். காலம் காலமாக கோயில் நிலங்களில் மறு ஏலம் என்ற அடிப்படையில் சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடவேண்டும்.
பல தலைமுறைகளாக அடிமனைகளில் வீடு, சிறு கடைகள் கட்டி பயன்படுத்தி வருபவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி நிலத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்பன உட்படப் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தயாளன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி கம்பம் நகர குடியிருப்போர் நலச் சங்க செயலாளர் ஆர்.கணேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.பெருமாள் ஆகியோர் பேசினர். இதில் விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் டி.கண்ணன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT