Published : 27 Dec 2022 06:05 AM
Last Updated : 27 Dec 2022 06:05 AM
சென்னை: அரசு பள்ளிகளில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணிணி, தையல்,இசை, தோட்டக்கலை, கட்டிடக் கலை,வாழ்வியல் திறன் பாடங்களை கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.10,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு சம்பள உயர்வோ, பணி நிரந்தரமோ இதுவரை செய்யப்படவில்லை. இவர்களின் குடும்பம் வறுமையில் வாடுகின்றன. எனவே, மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்துவரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT