Published : 25 Nov 2022 06:46 AM
Last Updated : 25 Nov 2022 06:46 AM

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற முதல் குழு திரும்பியது: பாஜகவினர் உற்சாக வரவேற்பு

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ரயில் மூலம் சென்னை திரும்பிய தமிழக பிரதிநிதிகளை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மாலை அணிவித்து வரவேற்றார். உடன் மாநிலத் துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, ஆன்மிக பிரிவு மாநிலத் தலைவர் எம்.நாச்சியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள். படம்: ம.பிரபு

சென்னை: உ.பி.யில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 17-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் இருந்து மொத்தம் 2 ஆயிரத்து 592 பேர் பங்கேற்க உள்ளனர்.

காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க,4-வது குழுவாக 83 பேர், ராமேசுவரத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் செல்லும் விரைவு ரயிலில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்துநேற்று பயணம் செய்தனர். அவர்களை பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், எம்.சக்கரவர்த்தி, துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்ற முதல் குழுவினர் 216 பேர் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தடைந்தனர். அவர்களுக்கு பாஜ நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

காசி தமிழ் சங்கமம் பயணம் மேற்கொண்ட அனுபவம் குறித்துசிலர் கூறுகையில், "எங்களது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த பயணம் இருந்தது. சிறப்பான ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x