Published : 14 Sep 2022 06:38 AM
Last Updated : 14 Sep 2022 06:38 AM

மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

விழுப்புரம்: மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக ஆளுநர் மாநில அரசுக்கு விரோதமாகச் செயல்படுவதுடன், தொடர்ந்து மத்திய அரசின் கொள்கைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முயல்கிறார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

கரூரில் சட்ட விரோதமாக செயல்பட்ட கல் குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்தியசமூக ஆர்வலர் ஜெகநாதனைலாரி ஏற்றிக் கொலை செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், தமிழக முதல்வரின் வாக்குறுதியையும் மீறி, பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. போலீஸார் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும். இதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகள்மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புச் சோதனை நியாயமானது. அவர்கள் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x