Published : 04 Oct 2016 08:39 AM
Last Updated : 04 Oct 2016 08:39 AM

டிஜிட்டல் மீட்டர் பயன்பாடு, அதிக விலை மின்சாரம் தவிர்ப்பு: தமிழ்நாடு மின்வாரிய நஷ்டம் கடந்த ஆண்டு 55% குறைந்தது - வாரிய தணிக்கை அறிக்கையில் தகவல்

டிஜிட்டல் மீட்டர் பயன்பாடு மற்றும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதை நிறுத்தியதால், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நஷ்டம் கடந்த 2014-15- ஐவிட, 2015-16-ம் ஆண்டில் 55 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோருக்கான மின்சாரத்தை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வழங்கி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத் தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டில் நஷ்டத்தை 55 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது.

மின்சார விற்பனை, மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு மற்றும் இதர வகையில் என, 2014-15-ல் ரூ.42ஆயிரத்து 507 கோடியே 9 லட்சமும், 2015-16-ல் ரூ.49 ஆயிரத்து 705 கோடியே 39 லட்சமும் வருவாய் பெறப்பட்டுள்ளது.

அதே நேரம், மின் உற்பத்தி யாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கியது, மின் உற்பத்தி, பழுதுபார்த்தல், நிர்வாகம், வட்டி மற்றும் நிதி கட்டணம் உள்ளிட் டவை மூலம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்துக்கு செலவு ஏற்படுகிறது. இந்த வகையில் கடந்த 2014-15-ல் ரூ.55 ஆயிரத்து 263 கோடியே 68 லட்சம் மற்றும் 2015-16-ல் ரூ.55 ஆயிரத்து 492 கோடியே 21 லட்சமும் செலவு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, 2014-15-ம் நிதி யாண்டை விட, கடந்த 2015-16-ம் நிதியாண்டில், மின்வாரி யத்துக்கான இழப்பு ரூ.6 ஆயி ரத்து 969 கோடியே 78 லட்சம் அளவுக்கு அதாவது 54.64 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அளித்த தணிக்கை அறிக் கையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து மின் வாரியத்துக்கான இழப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2015-16-ல் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு, வரு வாய் அதிகரித்ததும், செலவு குறைந்ததும் காரணம். தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பழைய மின் மீட்டருக்கு பதில் புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. மின் வருவாயும் அதிகரித்து வருகிறது. மேலும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமும், இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பசுமை வழித்தடம் அமைக்கப்பட்டதன் காரணமாக காற்றடிக்கும் மாதங்களில் காற்றாலைகளில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 4 ஆயிரத்து 600 மெகாவாட் வரை பெறப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் இருந்து அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அதன் மூலம் தனியார் உற்பத்தி மின்சாரம் பெறு வது குறைக்கப்பட்டது. இது தவிர அனல் மின் நிலையங்க ளுக்கு தேவையான நிலக்கரி உள் நாட்டில் இருந்து அதிகளவில் பெறப்பட்டதும் இழப்பு குறைந்த தற்கு முக்கிய காரணமாகும்,

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x