Published : 30 Aug 2022 04:25 AM
Last Updated : 30 Aug 2022 04:25 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மதுரை தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பத வியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். அதேநேரத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து விலகி மக்களைச் சந்திக்க கே.பழனிசாமி தயாரா? என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு தனது ஆதரவாளர்களை அவர் சந்தித்து வருகிறார். மதுரை, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் நேற்று ஆலோசனை நடத்திய பின் அவர் பேசியதாவது:
அதிமுக பொதுக்குழு காலை 10 மணிக்கு நடைபெறும் நிலையில் 8 மணிக்கெல்லாம் அவசரகதியாக பழனிசாமி சென்றார். நான் 8.40 மணிக்கு கிளம்பியபோது என்னை பொதுக்குழுவில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் வகையில் 7 இடங்களில் பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு செயற்கையாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தப்பட்டது.
அதிமுக அலுவலகம் எம்ஜிஆர்.மனைவி ஜானகியால் தானமாக கொடுத்த சொத்து ஆகும். பழனிசாமியின் அப்பா வீட்டு சொத்து கிடையாது. அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்ட யார் அதிகாரம் கொடுத்தது? எனது வீட்டில் எதற்கு நானே திருட வேண்டும்? அதிமுகவில் மட்டுமே தொண்டன் தலைவனாக முடியும்.
இது தொண்டர்களுக்கான இயக்கம் ஆகும். என் மீதான நம்பிக்கையில்தான் ஜெயலலிதா எனக்கு தொடர்ந்து முதல்வர் பதவி அளித்தார். நான் ஒருங்கிணைப் பாளர் பதவியை ராஜினாமா செய்யத் தயார். இணை ஒருங் கிணைப்பாளர் பதவியை கே.பழனிசாமி ராஜினாமா செய்து விட்டு மக்களைச் சந்திக்க தயாரா?
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை புறநகர் தெற்கு மாவட் டச் செயலாளர் ராமமூர்த்தி, திருமங்கலம் ஒன்றிய மாணவரணி செயலாளர் கே.சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT