Published : 20 Aug 2022 06:04 AM
Last Updated : 20 Aug 2022 06:04 AM

தி.மலையில் வரும் 24-ம் தேதி முதல் குரூப் - 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

திருவண்ணாமலை: குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு வரும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்கள் தேர்வு எழுதலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகையும் உண்டு.

மேலும் விவரங்களுக்கு, www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்காக, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 24-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. மேலும், 04175-233381 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x