Published : 15 Aug 2022 06:01 AM
Last Updated : 15 Aug 2022 06:01 AM
திருப்பத்தூர்: தமிழக நிதியமைச்சரின் கார் மீது காலணி வீசியது கண்டிக்கத்தக்க செயல், வன்முறை மூலம் ஆட்சியமைக்க பாஜக நினைக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் 75-ம் ஆண்டு சுதந்திரவிழாவை கொண்டாடும் வகையில், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாத யாத்திரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காங் கிரஸ் கமிட்டி தலைவர் ச.பிரபு தலைமை வகித்தார். இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில முன்னாள் தலைவர் தங்கபாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாத யாத்திரை தொடங்கி வைத்தார். ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் சிறப்பு குறித்தும், பாஜக அரசின் மக்கள் விரோத போக் கினை எடுத்துரைத்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கி நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என முழக்க மிட்டனர்.
இதையடுத்து, ஆம்பூரில் உள்ள காமராஜர் சிலைக்கு தங்கபாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, செய்தி யாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘வன்முறை மூலமாக பாஜக கட்சியை வளர்க்கலாம் என நினைக்கின்றார்கள். இது சரியான நடைமுறை இல்லை. காங்கிரஸ் கட்சி வன்முறைக்கு எதிரான கட்சியாகும்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது காலணி வீசி வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது நாகரீகமற்ற செயல். அரசியலில் எதிர்ப்பு இருந்தால் ஜனநாயக முறையில் போராடலாம், பேச்சு வார்த்தை நடத்தலாம், தங்கள் கொள்கைகளை முன் வைக்கலாம். இது தான் சரியான பாதை.
தமிழக பாஜக கட்சியின் முன்னணி தலைவர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் தற்போது பாஜகவில் இருந்து விலகி இருக்கின்றார். இதுவே, அக்கட்சியின் வீழ்ச்சிக்கு பெரிய உதாரணம்.
தமிழகத்தில் பாஜக எடுக்கும் எந்த ஒரு முடிவும் இங்கு பலிக்காது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் மிக பலமான கூட்டணி அமைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்படுகிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் எந்த விதமான செயல்பாடுகளும் இனி எப்போதுமே எடுபடாது’’ என்றார்.
நிகழ்ச்சியில், திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப் பாளர் பாரத் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT