Last Updated : 15 Aug, 2022 07:53 AM

 

Published : 15 Aug 2022 07:53 AM
Last Updated : 15 Aug 2022 07:53 AM

சுதந்திரச் சுடர்கள்: ஆகஸ்ட் 15, 1947: நடந்தது என்ன?

200 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அனைத்து உரிமைகளையும் இழந்து, பல கொடிய சித்ரவதைகளை இந்தியர்கள் அனுபவித்துவந்தனர். இந்தியர்களின் வாழ்வில் ஆகஸ்ட் 15, 1947இல் சுதந்திர ஒளி படர்ந்தது. அந்த நாளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்:

# ஆகஸ்ட் 15, 1947 அன்று, தில்லியின் சாலைகளில் மக்கள் பெரும் கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர். நகரெங்கும் மூவண்ணக் கொடிகள் பெருமிதத்துடன் பறந்தன.

# அதே நாளில், ஜவாஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார்.

# பதவியேற்பு விழா வைஸ்ரீகல் லாட்ஜில் நடைபெற்றது.

# சுதந்திர இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு அரசமைப்பு அவை உறுப்பினர்களிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் ஜவாஹர்லால் நேரு கேட்டுக் கொண்டார்.

# சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடி கவுன்சில் இல்லத்தின் (தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம்) மேல் ஏற்றப்பட்டது.

# இந்திய நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஜவாஹர்லால் நேரு நிகழ்த்தினார்.

# அப்போது சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர்.

# ஜவாஹர்லால் நேரு தனது முதல் நாடாளுமன்ற உரையில், “துரதிர்ஷ்ட வசமான ஒரு காலகட்டத்துக்கு நாம் இன்று முடிவுரை எழுதிவிட்டோம். இந்தியா மீண்டும் தன்னைக் கண்டுபிடித்துக் கொள்ளும்” என்றார்.

- ஹுசைன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x