Published : 02 Aug 2022 07:58 AM
Last Updated : 02 Aug 2022 07:58 AM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, நாளை (ஆக. 2, 3) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 4-ம் தேதி ஒருசில இடங்களிலும், 5-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல்அதி கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 3, 4-ம் தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x