Published : 21 Jun 2022 06:40 AM
Last Updated : 21 Jun 2022 06:40 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் 9 பேரை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: செங்கல்பட்டு வட்டாட்சியர் வாசுதேவன் மாமல்லபுரம் - எண்ணூர் ஆரச்சாலை திட்ட நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் செங்கல்பட்டு கோட்ட கலால் அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர தாம்பரம் வட்டாட்சியர் பாலாஜி வண்டலூர் வட்டாட்சியராகவும் மாமல்லபுரம் - எண்ணூர் ஆரச்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியர் கவிதா தாம்பரம்வட்டாட்சியராகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் ராஜேஷ் மதுராந்தகம் வட்டாட்சியராகவும் மதுராந்தகம் வட்டாட்சியர் நடராஜன் செங்கல்பட்டு வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், செய்யூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சரவணன் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் சென்னை - கன்னியாகுமரி தொழில்நுட்ப திட்ட தனி வட்டாட்சியர் செந்தில்குமார் செய்யூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் பறக்கும்படை தனி வட்டாட்சியர் சங்கர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர்ந்து அதன் விவரத்தை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT