Published : 18 Jun 2022 06:12 AM
Last Updated : 18 Jun 2022 06:12 AM
சிவகங்கை: சிவகங்கையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டி களை மறைத்து ஜெயலலிதா பட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்துக்கு பிறகு ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக அவர்களின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
மானா மதுரை ஒன்றிய அதிமுக பிரமுகர் தீயனூர் பாலா என்பவர் ஒபிஎஸ்க்கு ஆதரவாக நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினார். இதற்கிடையில் ஒற்றை தலைமை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவையில்லை,’ என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று சிவகங்கை நகர் முழுவதும், ஓபிஎஸ்க்கு ஆதரவாக சுவரொட்டி கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் ‘அம்மாவின் தலைமகனே அதிமுகவுக்குத் தலைமை ஏற்க வா’ என்ற வாசகத்துடன் அம்மாவின் உண்மை தொண்டன், எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த சுவரொட்டி களை மறைக்கும் வகையில் அதன்மீது ஜெயலலிதா படத் துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதனிடம் கேட்டபோது, கருத்துகூற மறுத்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...