Published : 30 May 2022 06:08 AM
Last Updated : 30 May 2022 06:08 AM
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தையின் உடல் குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தின் 2-வது நடைமேடை அருகே துணியால் சுற்றப்பட்ட நிலையில் சுமார் ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் இருப்பதை சிலர் நேற்று முன்தினம் காலை பார்த்தனர். இந்த தகவலை அடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டனர்.
குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ரயில்வே காவல் துறையினர் நடத்திய முதற் கட்ட விசாரணையில், இறந்த ஆண் குழந்தை வடமாநிலத்தைச் சேர்ந்த பெற்றோருடையது என்றும் ரயில் பயணத்தின்போது இறந்ததால் உடலை வீசிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, ரயில் பயணிகளின் டிக்கெட் விவரங்களை ரயில்வே காவல் துறையினர் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT