Published : 27 May 2022 07:34 AM
Last Updated : 27 May 2022 07:34 AM
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய சரத்பாபு, பாஜகவில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலைய மாநிலச் செயலாளராக இருந்தவர் இ.சரத்பாபு. கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சியின் மீது ஆர்வம் குறைந்துவிட்டதாக குற்றம்சாட்டி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இவர் கடந்த 25-ம் தேதி விலகினார்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னிலையில், சரத்பாபு நேற்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டை அளித்து அண்ணாமலை வரவேற்றார்.
இதற்கிடையே, மநீம துணைத் தலைவர் மவுரியா வெளியிட்ட அறிவிப்பில், ‘கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் தலைமை நிலைய மாநிலச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சரத்பாபு உடனடியாக நீக்கப்படுகிறார். எனவே, கட்சியினர் இனி அவருடன் கட்சி ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT