Published : 16 May 2022 07:06 AM
Last Updated : 16 May 2022 07:06 AM

பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போலீஸாரின் உதவியை நாட வேண்டும்: அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை: சென்னை மாநகர போக்குவரத் துக் கழகப் பேருந்துகளில் பயணம்செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 500 பேருந்துகளில் முதல்கட்டமாக சிசிவிடி கேமாரக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேருந்திலும் 3 கேமராக்கள், அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் சிரமங்களின்போதும், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதும், அவசர அழைப்பு பொத்தானை அழுத்தி, அந்த நிகழ்வுகளைப் பதிவு செய்யலாம்.

அப்போது கட்டளை மையத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கும்.செயலியை இயக்குபவர் நிலைமையைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.

அதேபோல, பேருந்து நடத்துநர் காவல் துறை நடவடிக்கை மற்றும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் 9445030570 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டு, புகார் தெரிவிக்க வேண்டும். தலைமையக கட்டுப்பாட்டு மையம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x