Published : 16 May 2022 06:57 AM
Last Updated : 16 May 2022 06:57 AM
சென்னை: தமிழகத்தில் அரசு வேலையை எதிர்பார்த்து 76 லட்சத்து 35 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். இவை தவிர தொழில்நுட்பக் கல்வித் தகுதிகளை பதிவுசெய்வதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டு்ம். அப்போதுதான் பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அமலில் இருக்கும். இந்நிலையில், 30.04.2022 அன்றுள்ள நிலவரப்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மொத்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 76 லட்சத்து 35 ஆயிரத்து 59 ஆக உள்ளது. 24 வயது 35 வயது வரையுள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை மட்டும் 28 லட்சத்து 93 ஆயிரத்து 506 ஆகும்.
அதேபோல், 19 முதல் 23 வயது வரை உள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 83 ஆயிரத்து 755 ஆக உள்ளது. மொத்த பதிவுதாரர்களில் இளங்கலை படிப்பு மற்றும் பிஎட் படித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 795 ஆகவும், முதுகலை படிப்பு மற்றும் பிஎட் படித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 350 ஆகவும் அதேபோல், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 470 ஆகவும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT