Published : 16 May 2022 06:10 AM
Last Updated : 16 May 2022 06:10 AM
கமுதி: தமிழகத்தில் சுயமரியாதை ஆட்சி நடக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி யில் மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளரும், கமுதி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான தமிழ்ச்செல்வி போஸ் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக மாநில மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசியதாவது:
தமிழகத்தில் சாதி, மதங் களைக் கடந்து திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தமி ழகம் முன்மாதிரி மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இங்கு நடப்பது எல்லோருக்குமான ஆட்சி. அனை வருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஆட்சி. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புத் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தின் உரிமைகளை, பாரம்பரியத்தை மறைத்துவிடலாம் என பாஜக நினைக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் வகையில் சுயமரியாதை ஆட்சியாக திமுக ஆட்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
திமுக மாவட்டப் பொறுப்பாள ரும், எம்எல்ஏவுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT