Published : 14 May 2022 08:34 AM
Last Updated : 14 May 2022 08:34 AM
காஞ்சிபுரம்: காஞ்சி மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 14-ம் தேதி வரை வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையின் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டத்தில் ஜூன் 1, 2, 3, 7, 8-ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.
உத்திரமேரூர் வட்டத்தில் ஜூன் 1,2,3,7,8,9,10,14-ம் தேதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரையா தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் ஜூன் 1,2,3,7,8,9-ம் தேதிகளில் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஜூன் 1,2,3,7,8-ம் தேதிகளில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், குன்றத்தூர் வட்டத்தில் ஜூன் 1,2,3,7,8,9-ம் தேதிகளில் மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் தொடர்புடைய வட்டாட்சியரிடம் முன்னதாக தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும், முன் கூட்டியே கள ஆய்வுஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன்14-ம் தேதி வரை நடைபெறும் தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT