Published : 13 May 2022 06:30 AM
Last Updated : 13 May 2022 06:30 AM

ஜிப்மர் ஐசியூவில் 7 மாதங்களாக சிகிச்சைபெறும் கணவருக்காக மருத்துவமனையில் அல்லாடும் மனைவி: தமிழக அரசு கைகொடுக்குமா?

புதுச்சேரி: தசை அழற்சி நோயால் பாதிக் கப்பட்ட ஸ்தபதி ஒருவர் கடந்த 7 மாதங்களாக ஜிப்மர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி ஊரில் குழந்தைகளை விட்டுவிட்டு மருத்துவமனையில் தனி ஆளாக போராடி வருகிறார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனை வாயிலில் அதிகளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இங்கு புதுச்சேரி மட்டுமில் லாமல் தமிழக மக்கள் ஏராளமா னோர் நாள்தோறும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்தி திணிப்பு மட்டுமில்லாமல் முக்கிய மருந்து, மாத்திரைகளும் ஜிப்மரில் விநியோகிக்கப்படாததால் நோயாளிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். பலரும் வெளியில் பணம் கொடுத்து வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். நாள்தோறும் மதிய நேரத்தில் வள்ளலார் அமைப்பு உள்ளிட்ட சிலர் தரும் உணவுக்காக பலரும் காத்திருக்கும் நிலை தான் நீடிக்கிறது.

பண்ருட்டி அடுத்த திருவதிகைபகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியை அப்படியொரு தருணத்தில் பார்த்தபோது, கடந்த 7 மாதங்களாக ஐசியூவில் உள்ள தனது கணவருக்காக அங்கிருப்பதாகக் குறிப்பிட் டார். அவரது கணவர் வாசுதேவன். கோயில் ஸ்பதியான இவருக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் திடீரென கை, கால் இழுத்து விழுந்தவர் எழவில்லை.

பல மருத்துவரை பார்த்து செலவழித்துவிட்டு ஜிப்மர் மருத்துவமனையில் கணவரை சேர்த்துள்ள மகேஸ்வரி, கடந்த 7 மாதங்களாக ஐசியூ பிரிவில் உள்ள கணவரை அங்கேயே தங்கி கவனித்து வருகிறார்.

ஜிப்மரில் நடத்தப்பட்ட ஆய்வில் வாசுதேவனுக்கு 'தசை அழற்சி நோய்' என தெரியவந்தது. தனது இரண்டு சிறு குழந்தைகளையும் ஊரில் விட்டுவிட்டு கணவருக்காக 7 மாதங்களாக மருத்துவமனையில் இருப்பதால் ஊரில் உள்ள தனதுபிள்ளைகளை கவனிக்க ஆளில்லை என்கிறார் சோகத்துடன்.

இதுபற்றி மகேஸ்வரி கூறுகை யில், “7 மாதங்களாக கணவருக்கு சிகிச்சை தந்து வருகிறார்கள். உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை.கணவரை காப்பாற்ற அனைத்துநகை, பணத்தையும் செலவழித்து விட்டேன். கையில் பணமில்லை. கணரும் உடல் நலம் பெறவில்லை. தனியாளாக போராடுகிறேன். உதவ யாருமில்லை. மேல் சிகிச்சை அளிக்க தமிழக அரசு உதவினால் நன்றாக இருக்கும்” என்கிறார் சோகமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x