Published : 18 Apr 2022 06:14 AM
Last Updated : 18 Apr 2022 06:14 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக பாகூர் தொகுதி திமுக எம்எல்ஏவின் அலுவலகம் கோச்சிங் சென்டராக மாறியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதியின் திமுக எம்எல்ஏ செந்தில் குமார். இவர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை பாகூர் தொகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில், அரசு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி மைய மாக மாற்றியுள்ளார். இந்த பயிற்சிமையத்தை புதுச்சேரி சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான சிவா திறந்து வைத்து, பயிற்சிக்கு வந்தவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கினார். சுமார் 100 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தில் முது நிலை எழுத்தர், இளநிலை எழுத்தர், காவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணி யிடங்களுக்கான தேர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனிடையே பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவல கத்தின் ஒரு பகுதியில் பொதுமக்கள், மாணவர்களின் நலனுக்காக ஏற்கெனவே நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
இதுதொடர்பாக எம்எல்ஏ செந்தில்குமார் கூறுகையில், ‘‘மாண வர்கள், இளைஞர்களுக்கு அரசுபோட்டித் தேர்வுக்கான இலவசபயிற்சி மையம், என்னுடையசட்டப்பேரவை அலுவலகத்தி லேயே தொடங்கி வைத்துள்ளோம். கிராமப்புற பகுதியில் இருந்து அரசுத் தேர்வுகளில் போட்டியிட வேண்டும் என்றால் நகரப் பகுதிக்குசென்று அங்குள்ள பயிற்சி வகுப் புகளில் சேர்ந்து படிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. பலருக்கு நேரமின்மை, பொருளாதார சிக்கல்கள் இருக்கும் இத்தகைய சூழ்நிலையில், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், இங்கேயே பயிற்சி பெறுவதற்கான முயற் சியை எடுத்துள்ளோம். இது நல்லமுயற்சியாக இருக்கும். பாகூர் தொகுதியில் இருந்து பலர் பயன டைந்து அரசுத் தேர்வுகளில் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT