Published : 13 Apr 2022 06:45 AM
Last Updated : 13 Apr 2022 06:45 AM
சிவகங்கை: இந்தி கற்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் தெரிவித்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தொண்டர் ராமகிருஷ்ணனை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: திமுக ஆட்சிக்கு மத்திய அரசு பல இடையூறுகளை கொடுத்தாலும், அதையும் மீறி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பல நலத்திட்டங்களையும் செயல் படுத்துகிறார்.
அளவுக்கு மீறி பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். போர், கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையில் கொள்ளையடிக்கக் கூடாது. மோடி, அமித்ஷா பேச்சுகளால் அச்சம் ஏற்படுகிறது. இவர்களின் கொள்கை முடிவால் சோவியத் யூனியன் போன்று இந்தியா உடைந்து விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. இந்தியை கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்தியைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.
இந்தியை கற்றுக்கொண்டால் பக்கோடா, பானிபூரி விற்று பிழைத்துக் கொள்ளலாமே தவிர, பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைய முடியாது. இலங்கையில் பொரு ளாதார வீழ்ச்சிக்கு காரணம் விவசாயம்தான். இயற்கை விவ சாயத்தை உடனடியாக கொண்டு வந்ததால் விவசாய உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இயற்கை விவசாயத்தை படிப்படியாக கொண்டு வந்திருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT