Published : 05 Apr 2022 06:58 AM
Last Updated : 05 Apr 2022 06:58 AM
சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வரும் 12-ம் தேதி முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கானதேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அவ்விண்ணப்பத்தின் நகல், பெயர், முகவரி, கல்வித்தகுதி மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை வரும் 11-ம் தேதிக்குள் vgdeoslm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்கள் அறிய 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT