Published : 28 Mar 2022 01:38 PM
Last Updated : 28 Mar 2022 01:38 PM

கொடைக்கானல் ஏரியில் சைக்கிள் படகு அறிமுகம்

கொடைக்கானல் ஏரியில் வாட்டர் சைக்கிள் படகை இயக்கி மகிழும் சுற்றுலாப் பயணி.

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கிய நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கொடைக்கானலின் மையப் பகுதியில் உள்ள ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், நகராட்சி ஆகியவை சார்பில் பெடல் படகுகள், துடுப்புப் படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, ஏரியில் வாட்டர் சைக்கிள் படகை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பயணம் செய்வது நீரில் சைக்கிள் ஓட்டுவதுபோல் உள்ளது.

ஒருவர் பயணம் செய்யும் சைக்கிள் படகு மற்றும் இருவர் பயணம் செய்யும் சைக்கிள் படகு என இரு வகையான வாட்டர் சைக்கிள் படகுகள் உள்ளன. இந்த படகில் பயணிக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சைக்கிள் படகில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் காத்திருந்து சவாரி செய்து மகிழ்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x