Published : 14 Mar 2022 12:52 PM
Last Updated : 14 Mar 2022 12:52 PM
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் உறைவிட வசதியுடன் இலவச கல்வி பயில் வதற்காக தகுதியான எஸ்.சி. மாணவர்களை தேர்வு செய்ய நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ முதுநிலை இயக்குநர் (தேர்வுகள்) சதானாபரசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: படிப்பில் சிறந்து விளங்கும் எஸ்.சி. மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவச உறைவிட வசதியுடன் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சேர்ந்து பயிலமத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமயமாக்கல் அமைச்சகம் செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தின்கீழ் 3 ஆயிரம்மாணவர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். தகுதியுடைய மாணவர்களை தேர்வுசெய்வதற்கு என்டிஏ மே 7-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்த இருக்கிறது. எனவே, இந்த திட்டத்தின் கீழ்சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக படிக்க விரும்பும் எஸ்.சி. மாணவர்கள் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.nta.ac.in) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் கிடையாது. தகுதிகள், தேர்வு முறை, தேர்வு மையங்கள், ஆன்லைன் விண்ணப்பமுறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் https://shreshta.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அடிக்கடி என்டிஏஇணையதளத்தை பார்த்துவருமாறு அறிவுறுத்தப்படுகிறார் கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT