Published : 26 Feb 2022 09:06 AM
Last Updated : 26 Feb 2022 09:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. இதைக்காண ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அப்போது 3 பேர் அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை காவலர் கருணாகரன் மற்றும் ஐஆர்பிஎன் காவலர்களிடம் பொதுமக்கள் முறையிட்டனர். இதையடுத்து காவலர் கருணாகரன் அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது 3 பேரும் சேர்ந்து காவலரை ஆபாசமாக திட்டியதோடு, அவர்களில் ஒருவன் வீச்சரிவாளை எடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள், திருப்பூர் பொன்னம்மாள் நகரைச் சேர்ந்த விக்ரம் (22), லாஸ்பேட்டை சாமிப்பிள்ளைதோட்டம் அணைக்கரை வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (19), பூமியான்பேட்டை பாவாணர் நகர் ஆதீஸ்வரன் (22) என்பது தெரியவந்தது. 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT