Published : 25 Feb 2022 07:26 AM
Last Updated : 25 Feb 2022 07:26 AM

வெளிநாட்டில் படித்த மருத்துவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் குறைப்பு: அரசுக்கு லிம்ரா இயக்குநர் முகமது கனி நன்றி

பயிற்சிக் கட்டணத்தை குறைத்ததற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த லிம்ரா நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி.

சென்னை: வெளிநாட்டில் படித்த மருத்துவர்களுக்கு பயிற்சிக் கட்டணத்தை குறைக்க அரசு ஒப்புதல் வழங்கியதற்காக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி நன்றி தெரிவித்தார்.

வெளிநாட்டில் மருத்துவம் படித்து எப்எம்ஜி தேர்ச்சி பெற்றவர்கள், தமிழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சிக்கு கட்ட வேண்டிய தொகை ரூ.3,54,000 ஆக இருந்தது. இந்த பிரச்சினையை, எப்எம்ஜி மருத்துவர்கள் சார்பாக அரசின் கவனத்துக்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி கொண்டு சென்றார்.

தமிழகத்தில்தான் இக்கட்டணம் அதிகமாக உள்ளதுஎன சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோரிடம் எப்எம்ஜி மருத்துவர்கள் சார்பில் லிம்ரா நிறுவனம் முறையிட்டது. இதையடுத்து, துறை செயலர், துணைவேந்தர் ஆய்வு செய்து, கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரைத்தனர். கட்டணத்தை குறைக்குமாறு முதல்வரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, இக்கட்டணத்தை ரூ.29,400 ஆக குறைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக இருந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தியதற்காக, அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணைவேந்தர் சுதா சேஷய்யனை லிம்ரா நிறுவனர் முகமது கனி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இப்பிரச்சினையை அரசுக்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதில் பக்க பலமாக இருந்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கும் எப்எம்ஜி மருத்துவர்கள் சார்பாக முகமது கனி நன்றி தெரிவித்தார். l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x