Published : 23 Feb 2022 06:43 AM
Last Updated : 23 Feb 2022 06:43 AM

பெரும்பாலான பேரூராட்சிகளில் திமுக வெற்றி

திருவள்ளூர்/காஞ்சி/செங்கை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் ஆகிய 3 பேருராட்சிகள் உள்ளன. வாலாஜாபாத் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி-10, அதிமுக-5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. உத்திரமேரூர் பேருராட்சியில் 18 வார்டுகளில் திமுக கூட்டணி-14, அதிமுக- 4, பாமக-1 வார்டில் வெற்றி பெற்றுள்ளன. பெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக-6, காங்கிரஸ்-1, அதிமுக-3, சுயேச்சைகள்-4 வார்டுகளை கைப்பற்றியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 பேரூராட்சிகளில் 5 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. மாமல்லபுரம் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக-9, அதிமுக-5, சுயேச்சை-1 வார்டுகளை கைப்பற்றின. இடைகழிநாடு பேரூராட்சியில் 21 வார்டுகளில் திமுக-7, அதிமுக-6, பாமக-2, விசிக-1, தேமுதிக-1, காங்கிரஸ்-1 இடத்திலும் சுயேச்சை-3 இடத்திலும் வெற்றி பெற்றன.

கருங்குழி பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக-11, அதிமுக-3, சுயேச்சை-1 வெற்றி பெற்றன. மாமல்லபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக-9, திமுக-4, மதிமுக-1, சுயேச்சை-1 வார்டுகளை கைப்பற்றின. திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக-9,அதிமுக-3, விசிக-1, சுயேச்சை-1, மதிமுக-1 இடத்திலும் வெற்றி பெற்றன.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் திமுக-10, அதிமுக-5, பாமக-3 வார்டுகளில் வெற்றி பெற்றன. இங்குள்ள 6பேரூராட்சிகளில் 99 வார்டுகள் உள்ளன. இவற்றில் 50 வார்டுகளை திமுக கைப்பற்றியது. 6 பேரூராட்சிகளில் 5 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 8 பேரூராட்சிகள் உள்ளன. இதில்ஆரணி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக-3,காங்கிரஸ்-1, அதிமுக-1, சுயேச்சை-10 வெற்றி பெற்றுள்ளனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 12-வது வார்டில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 14 வார்டுகளில் திமுக–12, அதிமுக–2 வார்டுகளில் வெற்றி பெற்றன. 10-வது வார்டில் திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளை பெற்றதால், குலுக்கள் முறையில் திமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக-9, விசிக-1, அதிமுக-3, பாமக-1, சுயேச்சை-1 வெற்றி பெற்றுள்ளன. திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக-6, மதிமுக-1, அதிமுக-6, பாமக-1, சுயேச்சை-1 வெற்றி பெற்றுள்ளன.

நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுக-10, அதிமுக-2, காங்கிரஸ்-1, சுயேச்சை-5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பள்ளிப்பட்டு பேரூராட்சி 15 வார்டுகள் உள்ளன. இதில் 4-வது வார்டில் திமுக வேட்பாளர் ராணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 14 வார்டுகளில் திமுக–12, சுயேச்சைகள்-2 பேர் வெற்றி பெற்றுள்ளன.

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில் அதிமுக-13, திமுக-4, காங்கிரஸ்-1-ல் வெற்றிபெற்றுள்ளன. மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் திமுக-12, காங்கிரஸ்-1, அதிமுக-1, சுயேச்சை-4 வெற்றி பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x