Published : 21 Feb 2022 07:39 AM
Last Updated : 21 Feb 2022 07:39 AM
சென்னை: சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் தென்னிந்திய ராணுவம் சார்பில் 75 கி.மீ. தூர சைக்கிள் பயணம் நடைபெற்றது. தென்னிந்திய ராணுவ படைத் தலைவர் ஏ.அருண், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாடு சுதந்திரம் பெற்றதன் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்திய ராணுவம் சார்பில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 75 கி.மீ. தூர சைக்கிள் பயண நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய ராணுவ படைத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் கொடியசைத்து சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்து பங்கேற்றனர்.
இதில் ராணுவம், காவல் துறையில் பணிபுரிவோர் குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பல்வேறு துறையினர், சைக்கிள் பயண குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 75 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
போர் நினைவுச் சின்னத்தில் அதிகாலை 5 மணிக்கு இப்பயணம் தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு வரை மொத்தம் சுமார் 75 கி.மீ. தூரம் பயணித்து மீண்டும் போர் நினைவுச் சின்னம் அருகே சைக்கிள் பயணத்தை நிறைவு செய்தனர். செல்லும் வழியெங்கும், ராணுவத்தில் சேர்ந்து தேசத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், உடல்நலம், ஆரோக்கியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர்.
செல்லும் வழியெங்கும், ராணுவத்தில் சேர்ந்து தேசத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், உடல்நலம், ஆரோக்கியம் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT