Published : 08 Apr 2016 04:33 PM
Last Updated : 08 Apr 2016 04:33 PM

அதிமுக வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி: திருப்பத்தூர் தொகுதி ராஜகண்ணப்பனுக்கு கிடைக்குமா?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இதில், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தொகுதிக்கு நகராட்சித் தலைவர் கற்பகம் இளங்கோ, திருப்பத்தூர் தொகுதிக்கு கல்லல் ஒன்றியக் குழுத் தலைவர் அசோகன், சிவகங்கை தொகுதிக்கு சிவகங்கை ஒன்றியக் குழுத் தலைவர் பாஸ்கரன், மானாமதுரை (தனி) தொகுதிக்கு மாரியப்பன் கென்னடி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கற்பகம் இளங்கோ, அசோகன், பாஸ்கரன் ஆகிய மூன்று பேரும் முக்குளத்தோரில் கள்ளர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். இத்தொகுதியில் கள்ளர், மறவர், அகமுடையார், யாதவர், முத்த ரையர், வல்லம்பர், வெள்ளாளர், உடையார் மற்றும் பிற சாதியி னர் பெரும்பான்மையாக வசிக் கின்றனர். முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் உள்ளனர்.

இவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் மூன்று தொகுதி களிலும் கள்ளர் சாதியினருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மற்ற சாதியினர் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக யாதவர் சாதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு திருப்பத்தூர் தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். அவருக்கு கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வேட்பா ளர்கள் மீதான அதிருப்தியில் மாற்றம் நடைபெற்று வருவதால், திருப்பத்தூர் தொகுதிக்கும் வேட்பாளர் மாற்றம் வரும் எனவும், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.

இது குறித்து ராஜகண்ண ப்பனின் ஆதரவாளர்கள் கூறிய தாவது: 2011 தேர்தலில் திமுக எம்எல்ஏ பெரியகருப்பன், ராஜ கண்ணப்பனை விட 1,584 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். இம்முறை ராஜகண்ணப்பனுக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவது உறுதி. தற்போது தொகுதிக்கு தொடர்பில்லாத கல்லல் ஒன்றியக் குழுத் தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தொகுதி மக்களிடம் அறிமுகம் இல்லாதவர். திமுக எம்எல்ஏ பெரியகருப்பனின் போட்டியை சமாளிக்கும் வகையில் தகுதியானவரை வேட்பாளராக தலைமை அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களான நாங்கள் எதிர்பார்க்கிறோம், என் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x