Published : 10 Feb 2022 07:40 AM
Last Updated : 10 Feb 2022 07:40 AM

மீதமுள்ள பொங்கல் தொகுப்பு பொருட்களை அம்மா உணவகங்களில் பயன்படுத்தலாம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், பொதுமக்கள் வாங்கியதுபோக மீதமுள்ள பொங்கல் தொகுப்பு பொருட்களை பயன்படுத்துவது குறித்து புதிய வழிகாட்டுதல்களை கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் நசிமுதீன் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்டதுபோக, கையிருப்பில் உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்களின் தரத்தை உறுதி செய்தபின், அந்தந்த மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர துணை ஆணையரிடம் ஒப்படைத்து தீர்வு செய்யலாம்.

அவற்றை மாவட்ட ஆட்சியர்கள்,துணை ஆணையர் (நகரம்) ஆகியோரின் விருப்புரிமை அடிப்படையில் பொதுநல அரசு சார், அரசு சாரா அமைப்புகளில் தங்கிபயன்பெற்று வரும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகள், தொழுநோயாளிகளுக்கான காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள், ஊரக குடிசைப் பகுதிகளில் உள்ள நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள், குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் குடும்பங்கள், அம்மா உணவ கம், சமுதாய சமையல் கூடங்கள் மற்றும் இன்னும் பிற பொது பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x