Published : 18 Jan 2022 06:15 AM
Last Updated : 18 Jan 2022 06:15 AM

வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்: கரோனாவால் பக்தர்கள் நேரலையில் காண ஏற்பாடு

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச விழாவையொட்டி நேற்று நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சி.

கடலூர்: வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 151-ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நேற்றுகொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (ஜன.18) தைப்பூச ஜோதி தரிசன விழா நடக்கிறது. கரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

வடலூரில் வள்ளலார் நிறுவியசத்திய ஞான சபையில் 151-ம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்கக் கொடிஏற்றப்பட்டது. தொடர்ந்து மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகியஊர்களிலும், காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடி யேற்றம் நடந்தது.

இதைத் தொடர்ந்து இன்று (ஜன.18) காலை 6 மணி முதல் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணி, பகல்1 மணி, மாலை 7 மணி, இரவு 10மணி, நாளை காலை 5.30 மணிஆகிய நேரங்களில் 7 திரை விலக்கிஜோதி தரிசனம் நடைபெறும்.

கரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தெய்வ நிலைய யூ டியூப் சேனல் மூலம் நேரலையில் இந்த ஜோதி தரிசனத்தை பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழநியில் திருக்கல்யாணம்

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் நேற்று இரவு முத்துக்குமார சுவாமி,வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மணக் கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிவெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இன்று மாலை 4.45 மணிக்கு, கரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி தேரோட்டம் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x