Published : 31 Mar 2016 08:07 AM
Last Updated : 31 Mar 2016 08:07 AM

பஞ்சவர்ண பூச்சு, ஹெர்பல் முறைப்படி சுத்திகரிப்பு: கும்பாபிஷேகத்துக்கு தயாரானது கபாலீஸ்வரர் கோயில் - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 3-ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகத்துக்காக கோயிலில் பஞ்சவர்ண பூச்சு, ஹெர்பல் முறைப்படி சுத்திகரிப்பு பணிகள் நடத்தப்பட்டுள்ளன.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில், 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் என்னும் அடிப்படையில், இந்தாண்டு கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பணிகள் கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கின.

கடந்த 6 மாத காலத்துக்கு மேல் நடந்து வந்த கும்பாபிஷேக பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதன் பேரில், கும்பாபிஷேகம் வரும் 3-ம் தேதியன்று காலை 8.30 மணி முதல் 9.50 மணிக்குள் நடக்கவுள்ளது. இதற்காக கிழக்கு ராஜகோபுரத்தில் 9 கலசங்கள், மேற்கு கோபுரம் 7 கலசங்கள் மற்றும் இதர கலசங்கள் 19 என 36 கலசங்களுக்கு தங்க நீர் தோய்த்து முடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் 19 சன்னிதிகளின் விமானங் களுக்கு பழுதுபார்த்து பஞ்சவர்ணம் தீட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஒரு பெரிய தேர், 4 சிறிய தேர்கள், அறுபத்து மூவர் பல்லக்கு கள் என அனைத்து வாகனங்களும் பழுது நீக்கி புதிதாக வண்ணம் தீட்டப் பட்டுப்பட்டுள்ளன. புருஷ மிருக வாகனத்துக்கு 41.325 கிலோவில் வெள்ளி கவசம் அணிவிக்கப் பட்டுள்ளது. கற்பகாம்பாள் சன்னிதி அந்தராலய நுழைவு வாயிலுக்கு 25.55 கிலோவிலும், படிக்கட்டுகளில் 13.055 கிலோவிலும் வெள்ளி தகடு பொறுத்தப்பட்டுள்ளது.

கபாலீஸ்வரருக்கு 4 கிலோ தங்க நாகாபரணமும், கற்பகாம்பாள் பாவாடைக்கு மேல் கவசம் செய்ய சுமார் 2 கிலோ தங்கமும் பயன்படுத் தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1 கோடியே 56 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. குளத்தின் நீர் மறுசுழற்சி மூலம் தூய்மை செய்யப்பட்டுள்ளது. நீராழி மண்டபம், படிக்கட்டுகள், சுற்றுச்சுவர் சரி செய்வது, இரும்பு கிரில் அமைப்பது போன்றவற்றுக்கு ரூ.9 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை அமைக்கப்பட்டு 45 ஹோம குண்டங்கள், ஹோம திரவியங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக கோயில் சன்னிதியின் உள் பிரகாரங்களில் ஹெர்பல் மூலம் தூய்மைப்படுத்தும் பணி, சுற்றுப்பிரகார சன்னதிகளின் மராமத் துப் பணிகள் மேற்கூரை அமைப்பது ஆகிய பணிகள் ரூ.9 கோடி செலவில் செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமன்றி, பக்தர்களின் பாது காப்புக்காக காவல்துறையினர் குவிக் கப்பட்டுள்ளனர். கோயிலை சுற்றி 8 கண்காணிப்பு கேமராக்கள், புறக் காவல் நிலையம், சிசிடிவி மையம் ஆகியவை அமைக்கப்படவுள் ளன. குடிநீர், ஆம்புலன்ஸ், கும்பாபி ஷேகத்தை காண 4 திரைகள் அமைக் கப்படவுள்ளன. கும்பாபிஷேக பந்தல் மற்றும் கோபுர மேற்புற சாரங்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x